தினம் ஒரு தகவல்

திருக்குறள் சுவையான தகவல்கள்:

        திருக்குறள் சுவையான தகவல்கள்: திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர் திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர் திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:18th September 2013

Comments For Above Post

fe    Posted on    Tuesday 8th of October 2013 10:34:52 AM (IST)

Very nice boss

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

காந்தி கணக்கு என்றால் என்ன?

        காந்தி கணக்கு என்றால் என்ன? காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம். மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:17th September 2013

Comments For Above Post

ர பெருமாள்    Posted on    Tuesday 14th of January 2014 09:48:47 AM (IST)

நன்றி

-------------------------------------------------------------------------------------------------------------------

n.ganesan    Posted on    Saturday 8th of February 2014 03:56:55 AM (IST)

காந்தி கணக்கு

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

         இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம். 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 10. பேசாமல் இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:15th September 2013

Comments For Above Post

Comment

பொதுஅறிவு

        சென்னை சிறப்பு இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு. பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர் மக்கள் தொகை : 70 லட்சம். உயரம் : கடல் மட்டம் மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி). பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:9th September 2013

Comments For Above Post

Seeralan Rajendran    Posted on    Saturday 14th of September 2013 11:42:33 AM (IST)

One request for,the GK questions give in English also.because the children also read this information.thank u.

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

பொது அறிவு

        1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? திரு. சரண்சிங். 2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 5. 3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது? உதடு. 4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்? கிட்டத்தட்ட 2.5 ஏக்கர். 5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன? அராக்கிஸ் ஹைபோஜியா. 6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணு சர்மா. 7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21. 8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை? 22 . 9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? நாக்கு. 10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? மோகனாங்கி. 11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம். 12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை. 13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல். 14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:7th September 2013

Comments For Above Post

Seeralan Rajendran    Posted on    Tuesday 10th of September 2013 09:30:23 AM (IST)

GK questions useful for the children. thank u.

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

பொது அறிவு

        1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? திரு. சரண்சிங். 2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 5. 3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது? உதடு. 4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்? கிட்டத்தட்ட 2.5 ஏக்கர். 5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன? அராக்கிஸ் ஹைபோஜியா. 6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணு சர்மா. 7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21. 8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை? 22 . 9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? நாக்கு. 10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? மோகனாங்கி. 11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? வெங்காயம். 12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? மூன்றாம் பிறை. 13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல். 14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? அலகாபாத்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:7th September 2013

Comments For Above Post

Comment

தெரிந்து கொள்ளுங்கள்

        *இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும். *மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 3000 யூனிட் மின்சாரம் தேவை.இந்தியாவில் தற்போது சராசரியாக ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மின்சாரம் 800யூனிட்கள். *ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில்கிடைக்கும் சூரியவெப்பம் கொண்டு 700 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். *நமக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு:7வாட்ஸ் L.E.D.பல்ப் தரும் ஒளி =18 வாட்ஸ் C.F.L.BULBதரும் ஒளி =40 வாட்ஸ் tube light தரும் ஒளி =60வாட்ஸ் குண்டு பல்ப் தரும் ஒளி. எனவே L.E.D.பல்ப் அதிகம் உபயோகத்திற்கு வந்தால் மின்சார செலவு கணிசமாகக் குறையும். *ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு 0.5 கிலோ நிலக்கரி எரிக்கப்படுகிறது. அதிலிருந்து 1.5கிலோ கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது.இதனால் நமது சுற்று சூழல் கணிசமாக பாதிக்கப்படுகிறது. *இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம்,நிலக்கரி மூலம் தெர்மல் நிலையங்களில் 70%ம் ,அணுமின் நிலையங்கள் மூலமாக 15%ம் ,நீர் மூலமாக 5%ம் முறைசாரா வழிகளில் காற்றாலை மூலமாக 3%ம்,சூரிய சக்தியின் மூலம் 1%ம் பயோ சிஸ்டத்தின் மூலம் 1%ம்கிடைக்கிறது. *இந்தியாவில் இன்னும் 40%வீடுகளில் மின்சாரம் இல்லை..!!!

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:29th August 2013

Comments For Above Post

Comment

தெரிந்து கொள்வோம்

         எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!. ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!. தலைவா படத்துக்காக தற்கொலை பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!. பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!. கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!. உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!. மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!. ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!. இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!. 15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!. ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!. தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:26th August 2013

Comments For Above Post

Seeralan Rajendran    Posted on    Tuesday 27th of August 2013 05:52:14 AM (IST)

your msg is excellent.

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

தெரிந்து கொள்ளுங்கள்

        1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். 8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை. 9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும். 10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும். 11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு. 12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது 13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:25th August 2013

Comments For Above Post

Comment

உளவியல் சொல்லும் உண்மைகள்

        # உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:15th August 2013

Comments For Above Post

Seeralan Rajendran    Posted on    Sunday 25th of August 2013 12:02:12 PM (IST)

This msg is very nice.

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

உங்களுக்குத் தெரியுமா?

        உங்களுக்குத் தெரியுமா? * கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம். * கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல். * தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு. * சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம். * மலைகளில் பெரியது இமயமலை. * ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு. * ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி. * பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம். * பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர். * வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து. * மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர். * மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு. * மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன. * மிக வெப்பமான கோள் வெள்ளி. * உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன. * சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன. * அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:14th August 2013

Comments For Above Post

Seeralan Rajendran    Posted on    Tuesday 27th of August 2013 05:55:57 AM (IST)

GK msg is very useful for the people. It is good thing.

-------------------------------------------------------------------------------------------------------------------
Comment

தெரிந்து கொள்ளுங்கள்

        • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும். • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை. • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. • கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். • ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ். • யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர். • கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி. • இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர். • உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு. • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ. • பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. • ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா. • சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன். • தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'. • புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப். *கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:29th July 2013

Comments For Above Post

Comment

உங்களுக்கு தெரியுமா..?

        உங்களுக்கு தெரியுமா..? வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும். தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும். 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும். திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும். கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும். எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும். 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான். சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும். பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும். வெங்காயம், கொழுப்பை குறைக்கும். பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும். நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது. லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார். 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது. எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள். வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது. சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும். கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

தகவல்:வெற்றி . சதீஷ் குமார்
நாள்:28th February 2013

Comments For Above Post

Comment